E. பிரியா



என்னை திருமணம் செய்பவர் என்னுடைய திருநங்கை தோழிகளை மதிப்பவராக இருக்கவேண்டும். என்னை உடலளவில் விரும்பாமல் என் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து என் மனதை விரும்புபவராக இருக்கவேண்டும். எனக்கு இதுவரை கிடைக்காத அன்பை, அரவணைப்பை தருபவராக இருக்கவேண்டும்.
என்னுடைய பணத்தையும், பொருளையும் விரும்பாத ஒரு ஆண்மகனாக இருக்கவேண்டும். என்னைவிட அழகாகவும் மற்றும் பணம் பொருளில் அதிகமாக இருக்கும் திருநங்கையை கண்டவுடன் மனம்மாறி ஓடக்கூடாது. எனக்கு படிக்கும் ஆசை உள்ளது. பிற்காலத்தில் அதற்கு தடையாக இருக்கக்கூடாது. பிறரிடம் என்னை மனைவி என்று அறிமுகப்படுத்த தயங்கக்கூடாது. எங்கும் என்னை அழைத்துச்செல்ல தயங்கக்கூடாது. நல்ல வேலையில் இருப்பவராக, பொறுப்பானவராக இருக்கவேண்டும். உடையிலும், பேச்சிலும் நவநாகரிகம் உடையவராக இருக்கவேண்டும். 21-25 வயதுள்ளவராக இருக்கவேண்டும். என்னைவிட உயரமானவராகவோ அல்லது என் உயரத்திலோ இருக்கவேண்டும். நல்ல உடற்கட்டுடன் இருக்கவேண்டும். மீசையுள்ளவராக இருக்கவேண்டும். அப்படி ஒருவர் இருப்பின் அவர் தன்னை பற்றிய விபரங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி . reachsahodari(at)gmail.com

என்னைப்பற்றி

என் உயரம் 5 அடி 8 அங்குலம். மாநிறம். சென்னையில் வசிக்கிறேன். ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிப்பை தொடரமுடியவில்லை. தாய்தந்தை அரவணைப்பு இல்லாத காரணத்தால் சகதோழிகளுடன் வசித்துவருகிறேன். முன்பு பாலியல் தொழில் செய்துவந்தேண். தற்போது பல ஹெச்.ஐ.வி தொண்டு நிறுவனங்களில் ஆலோசகராகவும், பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றிவருகிறேன். தமிழ் மற்றும் கன்னடம் பேசுவேன். ஆங்கிலம் ஓரளவு தெரியும். மாடலிங்கில் விருப்பம் உள்ளது.