செளமியா



என்னுடைய வாழ்க்கை துணைவர் நல்லவராக இருக்கவேண்டும். குறிப்பாக அன்புகாட்டி என் மனதில் ஆசைகளை விதைத்துவிட்டு ஏமாற்றுபவராக இருக்கக்கூடாது. திருநங்கைகளை மதிப்பவராக இருக்கவேண்டும்.

மற்ற திருநங்கைகள் மேல் காதல்கொள்பவராக இருக்கக்கூடாது. அவர் உழைப்பாளியாகவும், குடும்பபொறுப்புமிக்கவராகவும் இருக்கவேண்டும். படித்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை ஆனால் இனிமையான நடத்தை, பேச்சுடன் இயல்பானவராக இருக்கவேண்டும். சென்னைவாசியாக இருந்தால் மிகவும் மகிழ்வேன். ஏனென்றால் என் குடும்பத்தைவிட்டு வேறு ஊரில் சென்று வாழ எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒருவர் இருப்பின் அவர் தன்னை பற்றிய விபரங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி . reachsahodari(at)gmail.com

என்னைப்பற்றி:
175 சென்டிமீட்டர் உயரம். தமிழ் பெண்களின் நிறம். சென்னையில் வசிக்கிறேன். பாலியல் சிறுபான்மையினருக்கான தொண்டு அமைப்புகளில் வேலை செய்கிறேன். என் சம்பாத்தியத்தின் மூலம் என் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். அதிகம் படிக்கவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள ஆசை. தாய்மொழி தமிழ். தமிழிலும், ஹிந்தியிலும் சரளமாக பேசுவேன்.